Sunday, December 7, 2008

தைரியம்

இராணுவ பீரங்கி முன்
அமர்ந்திருக்கும் ஒரு வெள்ளை புறா !!
சிறுவர் பூங்காவின் இராணுவ நினைவிடத்தில்.....

Thursday, December 4, 2008

இரை

ஆற்றங்கரை ஓரம்
முதலையின் வாயில்
இரை கொத்தும் குருவி

Sunday, November 30, 2008

தீவிரவாதம்

தொலைக்காட்சியில்
தீவிரவாத குண்டு வெடிப்பு காட்ச்சி
குழந்தை கேட்கிறது
இது என்ன படம்?

Wednesday, November 26, 2008

எச்சரிக்கை

தலைவர்கள் சிலை மேல்
எச்சமிடும் காகம்
சுவரில் அறிவிப்பு "அசுத்தம் செய்யாதே!!"

Monday, November 24, 2008

வெளிச்சம்

மின்சார தடை...
மின்னள் ஒளி
ஜன்னல் ஓரத்தில் தீப்பெட்டி!!

Sunday, November 23, 2008

இசை மழை

இசைக் கச்சேரி
பலமான கர ஒலி
தலை துவட்டும் பெண்

Thursday, November 20, 2008

தர்மம்

கோவில் சன்னதியில்
தேவைக்கு வேண்டும் பக்தன்
வாயிலில் பிச்சை பாத்திரம்

Wednesday, November 19, 2008

அவலம்

நடைபாதையில்
உறங்கும் குழந்தை
போர்வையாக மூடு பனி

நாம் கண்டுபிடித்தது

என்னதான் பூஜ்ஜியத்தை(0) கண்டுபிடித்தது
இந்தியா என்றாளும்
அதை நாம் வாங்கும் போது
பெறுமைப் பட்டுக்கொள்ளவா முடியும்

Monday, November 17, 2008

காதல்

காதல் என்பது சலவைக்கல்லை
மொய்க்கும் ஈ போன்றதல்ல
மலரை சுற்றி ரீங்காரமிடும்
தேனீயைப் போன்றது

அரசியல்

தேர்தல் களம்
அடுத்த ஊழல் வாதிக்கு
வாக்களிப்பு

காலைப்பனி

அதிகாலை நேரம்
இலை மேல் பனிதுளி
மற்றும் ஓர் சூரியன்

Thursday, November 6, 2008

வணக்கம் நண்பர்களே,

தமிழில் வலைப்பூக்கல் இருபபதை அறிந்து, என்னைப் போல அந்நிய மாநிலத்தில் வசித்து வருபவர்களுக்கு மிகப் பயணுள்ளது என்று எண்ணி, கற்க்க வேண்டும், படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு என்னையும் ஒரு பூவாக, இந்த பூந்தோட்டத்தில் இணைத்துள்ளேன்,

மிக்க நன்றி,
ஜெய் ஹிந்த்
என்றும் அன்புடன்
வெ.காளிமுத்து