Monday, October 11, 2010

காக்கை கூடு

பறக்கும் ரயில் திட்டம் கட்டுமானம்
வரிசையாக சிமென்ட் கலவை தூண்கள்
கூட்டிலிருந்து எட்டி பார்க்கும் காகம் !!!

Friday, September 24, 2010

ஆட் குறைப்பு

பன்னாட்டு நிறுவனம்

நுழைவு வாயிற் பூங்கா

கத்தரிக்கப்பட்ட மனிதவுறு அழகு செடிகள் !!!

Thursday, July 22, 2010

முத்தம்

பெண்ணின் பழரசம் பூசிய உதட்டில்
முத்தமிடும் பல்லி
விளம்பர பலகையில்

Sunday, July 11, 2010

முதியோர் கல்வி

புத்தக பை சுமந்து பள்ளிக்கு செல்லும்
வயோதிகர்
சீருடையில் குழந்தை...

Saturday, July 10, 2010

விழிப்பு

ஆற்றங்கரை கிளை பரந்த ஆலமரம்
மேகமூட்டம் குளிர்ந்த காற்று
விழிக்கின்றேன் தூரத்தில் நட்சத்திரம் !!!

Wednesday, July 7, 2010

சுவடுகள்

கீழ்வானம் சூரியன் உதயம்
ஆர்பரிக்கும் கடல் அலைகள்
மணலில் ஒற்றை பாதச்சுவடுகள்...

Monday, July 5, 2010

சிகப்பு சிக்னல்

எரிபொருள் விலைவாசி உயர்வுக்காக பந்த்
ஆரவாரமற்ற சாலை சிகப்பு சிக்னல் சந்திப்பில்
நிற்க்கும் நாய் !!!

Wednesday, June 30, 2010

சமத்துவம்

புகை பிடிக்கும் ஊழியன்
முதலாளி எதிரே
புன்னகையோடு கண்ணாடி சட்டத்தில் !!!

Sunday, June 6, 2010

வியர்வை

கோடை வெய்யில் தாகம்
நீர் குவளைக்கு கூட வியர்க்கிறதே ?
சர்வர் வழங்கிய குளிர்ந்த நீரால் !!!

Tuesday, February 16, 2010

உஷ்ண காகம்

சூரியனில் குளிக்கும்
காகம்
ஆற்றங்கரை ஓரத்தில் !!!

Sunday, January 10, 2010

பொங்கல் விழா - வாங்க தமிழர்

வங்கத் தமிழ்களின் பொங்கல் திரு விழா கொல்கத்தா சுவ பூமியில் பாரதி தமிழ்ச் சங்கம் மற்றும் பல தமிழ் அமைப்புகளாள் 10.01.2010 ஞாயிறு அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மிக்ச் சிறப்பாக நடை பெற்றது. அது சமயம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளிள் பிற மாநில கலைக் குழுக்கள் பங்கு கொண்டு பரிசுகள் பெற்றார்கள்.


Saturday, January 9, 2010

விக்டோரியா நினைவு இல்லம்

மாலை நேர மின்னொளியில் விக்டோரியா நினைவு இல்லம்

Thursday, January 7, 2010

கொல்கத்தா-பிர்லா போலரங்கம்











கொல்கத்தா பிர்லா போலாரங்கம்
பனி பொழியும்
ஒரு இரவில்