Thursday, July 22, 2010

முத்தம்

பெண்ணின் பழரசம் பூசிய உதட்டில்
முத்தமிடும் பல்லி
விளம்பர பலகையில்

Sunday, July 11, 2010

முதியோர் கல்வி

புத்தக பை சுமந்து பள்ளிக்கு செல்லும்
வயோதிகர்
சீருடையில் குழந்தை...

Saturday, July 10, 2010

விழிப்பு

ஆற்றங்கரை கிளை பரந்த ஆலமரம்
மேகமூட்டம் குளிர்ந்த காற்று
விழிக்கின்றேன் தூரத்தில் நட்சத்திரம் !!!

Wednesday, July 7, 2010

சுவடுகள்

கீழ்வானம் சூரியன் உதயம்
ஆர்பரிக்கும் கடல் அலைகள்
மணலில் ஒற்றை பாதச்சுவடுகள்...

Monday, July 5, 2010

சிகப்பு சிக்னல்

எரிபொருள் விலைவாசி உயர்வுக்காக பந்த்
ஆரவாரமற்ற சாலை சிகப்பு சிக்னல் சந்திப்பில்
நிற்க்கும் நாய் !!!